கம்பம் அரசு மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ்..! தவெக எம்எல்ஏ ஏற்பாட்டில் சேவை தொடக்கம்.
கம்பம் :
தேனி மாவட்டம் கம்பம் அரசு பொது மருத்துவமனைக்கு, தமிழக வெற்றி கழகம் சார்பில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா ஏற்பாட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அவசர மருத்துவத் தேவைகளை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம், அவசர காலங்களில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான இடங்களுக்கு கட்டணமின்றி பயணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் அவசர மருத்துவ உதவிக்காக பயன்பெறும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளது.
அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவசர நேரங்களில் தனியார் ஆம்புலன்ஸ் கட்டணங்களை செலுத்த வேண்டிய சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த முயற்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பம் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர நேரங்களில் மருத்துவமனை செல்வதற்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுமக்களின் அடிப்படை தேவைகளில் கவனம் செலுத்தி, அவசர மருத்துவ உதவியை எளிதாகக் கிடைக்கச் செய்யும் வகையில் இந்த சேவை தொடர்ந்து பயனளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்