தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: கேரளாவில் அக்டோபர் 25 வரை கனமழை எச்சரிக்கை!
தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து, மியான்மர் பகுதிகளுக்கு மேலாக வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இந்தச் சுழற்சி அக்டோபர் 21ஆம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது மேற்கு–வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் தாக்கத்தால் அக்டோபர் 23ஆம் தேதியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய–கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் […]
தமிழக வெற்றிக்குரல்