தர்மபுரியில் அதிவேக ஸ்கேட்டிங் போட்டி: திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்!

தர்மபுரி:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான அதிவேக சாலை உருளைச் சறுக்கு போட்டி (Speed Skating Road Race) தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியும், மாவட்ட விளையாட்டு அலுவலரின் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற இப்போட்டி, தர்மபுரி SIPCOT தொழிற்பூங்கா சாலையில் சிறப்பாக நடைபெற்றது.

போட்டியில் மாணவர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது ஸ்கேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தையும் திறமையையும் வெளிக்கொணரும் வகையில் போட்டி அமைந்தது.

தர்மபுரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் செயலாளர் மாஸ்டர் சீனிவாசன் மற்றும் குழு மேலாளர் வெங்கடேசன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் போட்டி நடைபெற்றது.

ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் சாமுவேல், சத்திய உதயமூர்த்தி, பானு, அன்பரசு, ஐஸ்வர்யா, அமுல்ராஜ் மற்றும் தியோ தன்னார்வலர் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வழிகாட்டி போட்டியை சிறப்பாக நடத்தினர்.

மேலும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர். அவர்களின் ஆதரவு போட்டி நடைபெற்ற சூழலை மேலும் உற்சாகமாக மாற்றியது.

மாணவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை அதிவேக சாலை உருளைச் சறுக்கு போட்டி சிறப்பாக நிறைவு பெற்றது.

Leave a Reply