25 ஆண்டுகளை நிறைவு செய்த திருவனந்தபுரம் MBCET! வெள்ளி விழாவை தொடங்கி வைத்த கேரள ஆளுநர்.

திருவனந்தபுரத்தில் உள்ள மார் பசேலியோஸ் கல்லூரி ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (MBCET) கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக தொடங்கின.

கல்லூரியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டங்களை கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், MBCET கல்லூரியின் புரவலர் மற்றும் மேலாளருமான கார்டினல் மார் பசேலியோஸ் கிளீமிஸ் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் தேவஸ்வம் துறை அமைச்சர் கே. முரளீதரன் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் வளர்ச்சி, கல்விப் பணிகள் மற்றும் உயர்கல்வித் துறையில் அதன் பங்களிப்பு குறித்து விழாவில் எடுத்துரைக்கப்பட்டது.

கேரள மாநில உயர்கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் டாக்டர் அச்சுத்சங்கர் எஸ். நாயர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கல்லூரியின் 25 ஆண்டுகால கல்விப் பயணத்தை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply