சபரிமலை நடை செப்.16ல் திறப்பு: கன்னி மாத பூஜைக்கு பக்தர்கள் தயாரா?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கன்னி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.
மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் இ.டி. நடையைத் திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து 18ஆம் படிக்கு கீழ் உள்ள ஆழியில் அக்னி ஏற்றப்படும்.
கன்னி மாதத்தின் முதல் நாளான செப்டம்பர் 17ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்படும். கன்னி மாத பூஜை நாட்களில் மாலை தீபாராதனைக்குப் பிறகு 18ஆம் படியில் படிபூஜை நடைபெறும்.
கன்னி மாத பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 21ஆம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்படும்.
கன்னி மாத பூஜையையொட்டி சபரிமலை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள், விர்ச்சுவல் க்யூ முறையில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கான நேரத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்காக sabarimalaonline.org இணையதளத்தை பயன்படுத்தலாம்.
மேலும், சபரிமலை சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் செயல்படும் கெஸ்ட் ஹவுஸ்கள் மற்றும் பில்கிரிம் சென்டர்களில் தங்க விரும்பும் பக்தர்கள் onlinetdb.com இணையதளம் மூலம் அறைகளை முன்பதிவு செய்யலாம்.
தமிழக வெற்றிக்குரல்