செய்யாறு அருகே தவெக சார்பில் கிரிக்கெட் போட்டி! வெற்றி அணிகளுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் எம். உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டிய எம். உதயகுமார், இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் விளையாட்டுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, போட்டியில் முதல் இடம் பிடித்த அணிக்கு ரூ.15,001 ரொக்கம் மற்றும் கோப்பையை எம். உதயகுமார் வழங்கினார்.

இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ.10,001 ரொக்கம் மற்றும் கோப்பையை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ESB E. சரவணன் வழங்கினார்.

மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு ரூ.7,001 ரொக்கம் மற்றும் கோப்பையை ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் A. சுகுமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் செய்யாறு வடக்கு ஒன்றிய செயலாளர் M. பழனி, வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஓசூரான், மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன், வெற்றி பெற்ற அணிகளுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

Leave a Reply