மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனுவுக்கு முன் அண்ணா சிலைக்கு மரியாதை!
தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, மதுராந்தகம் தொகுதிக்கான திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரந்தாமன், இன்று காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் இல்லத்திற்கு சென்றார்.
அங்கு அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தான் தாக்கல் செய்ய உள்ள வேட்புமனு பத்திரத்தை அண்ணா சிலை முன்பு வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது திமுக மாவட்டச் செயலாளர் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக அண்ணா சிலைக்கு திமுக வேட்பாளர் மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்