சாக்கடை முதல் குடிநீர் வரை… கிருஷ்ணகிரி மக்களின் குறைகளை நேரில் கேட்ட எம்.எல்.ஏ. முகுந்தன்!

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நகர பழையபேட்டை, மில்லத் நகர், பக்கீர் மஸ்தான் தெரு, ஓலை இஸ்மாயில் தெரு, பார்வதி நகர், செம்பட தெரு மற்றும் காவாய் மேடு வார்டு எண் 4 ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பி. முகுந்தன் எம்.எல்.ஏ. மற்றும் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகர கழக செயலாளர் எம். சசிகுமார் ஆகியோர் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

அப்போது, பல்வேறு பகுதிகளில் சாக்கடை தேக்கம், பாதாள சாக்கடை வசதி, புதிய தார்சாலை அமைத்தல், பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றுதல், குப்பைகளை முறையாக அகற்றுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

மேலும், குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளையும் பொதுமக்கள் நேரடியாக தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. பி. முகுந்தன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து வந்து பிரச்சினைகளை நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டு அடிப்படை வசதிகளை சீர்செய்து தருவதாக உறுதியளித்தார்.

பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply