குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் முதல் புதிய அட்டை பதிவு வரை: கம்பத்தில் 2 நாள் சிறப்பு முகாம்.

கம்பம்:

கம்பம் சட்டமன்ற தொகுதியில் குடும்ப அட்டைதாரர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல். ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், பெயர் திருத்தம், குடும்பத் தலைவரின் பெயரை சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள இந்த முகாமில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், புதிய குடும்ப அட்டைக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளும் முகாம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. குடும்ப அட்டைதாரர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டப் பயன்களை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் கம்பம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

குடும்ப அட்டையில் திருத்தம் அல்லது மாற்றம் மேற்கொள்ள வேண்டியவர்கள், புதிய குடும்ப அட்டைக்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல். ஜெகநாத் மிஸ்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு குடும்ப அட்டை தொடர்பான தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply