பட்டா கேட்டு பொதுமக்கள் மனு: கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. முகுந்தனிடம் நேரில் கோரிக்கை.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணகிரி நகராட்சி வார்டு எண் 23-ல், பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்து கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. முகுந்தனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
வார்டு பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், பட்டா தொடர்பான பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து, கோரிக்கையின் தன்மை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகர செயலாளர் சசிக்குமார் பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். நீண்ட காலமாக பட்டா கிடைக்காமல் உள்ள தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்