நேற்று கோரிக்கை… இன்று நேரில் ஆய்வு! கிருஷ்ணகிரி நகரில் தொடரும் எம்எல்ஏ முகுந்தனின் களப்பணி!
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகரப் பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் ப. முகுந்தன் நேற்று மற்றும் இன்றும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் கால்வாய் அடைப்பு தொடர்பாக பொதுமக்கள் நேற்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்தப் பகுதியை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தவெக நகர செயலாளர் சசிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கால்வாய் அடைப்பை அகற்றி, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து, அவற்றின் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகரின் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காணும் வகையில் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றிக்குரல்