தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்; சென்னையில் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை!

சென்னை:

தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வு இன்று (17.09.2026) வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ஆர்.குமார் ஆகியோர் பங்கேற்று பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வில் அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பெரியாரின் 148-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply