கேரளாவில் தவெக உறுப்பினர் சேர்க்கை முகாம் – செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகம்.
திருவனந்தபுரம்:
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அரசியல் செயல்பாடுகளை கேரளாவிலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்க உள்ளதாக கேரள மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து, கேரளாவிலும் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்
அரசியல் மற்றும் சமூக வேறுபாடுகளைக் கடந்து, மக்களுக்கும் பொதுமக்களுக்கும் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்வதே கேரள மாநிலப் பிரிவின் நோக்கம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் ஏற்கனவே தவெக ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கட்சியின் அமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தவெக கேரளப் பிரிவின் இணையதளத்திலும் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், மாநிலம் முழுவதும் தொகுதி அளவிலான அமைப்புகளை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள்
விஜய் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமின்றி, பிற அரசியல் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்தவர்களும் கேரள மாநில அமைப்பின் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், திருவனந்தபுரம், கொல்லம், வயநாடு, இடுக்கி, எറണாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் புகழேந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொதுச் செயலாளர்களின் மேற்பார்வையில் கேரள மாநில உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில நிர்வாகிகளான டாக்டர் பிஜு ரமேஷ், கொல்லம் அனந்து, தோன்னக்கல் சதீஷ், டாக்டர் சுலைமான் பஷீர், விழிஞ்ஞம் எம்.ஏ. வாஹித், பீமாப்பள்ளி இர்ஷாத், ஹாஜா, ஷமீர், சுலைமான், வழக்கறிஞர் பிரவீண் பாபு, வயநாடு சாபு, இடுக்கி ஜெயன், எറണாகுளம் ஹாஷிப் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நடிகர் தேவனும் கேரளாவில் தவெக செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து முன்னதாக பேசியிருந்தார். கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கட்சியின் அமைப்பு செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கேரளாவில் ஏற்கனவே தொடங்கிய அமைப்பு பணிகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, கேரளாவிலும் தவெக அமைப்பு உருவாக்கும் பணிகள் தொடங்கியதாக மே மாதத்தில் செய்திகள் வெளியாகின. குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் கட்சியின் கேரள மாநில அமைப்பு தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், கேரளாவில் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளுக்காக தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியில் மலையாள மொழியும் இணைக்கப்பட்டதாக மே மாதத்தில் செய்தி வெளியானது.
தற்போது உறுப்பினர் சேர்க்கை முகாமை விரிவுபடுத்துவதன் மூலம் கேரளாவில் கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்த தவெக நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்