“தூய்மையே சேவை 2026” குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!
அம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை மற்றும் குப்பை தரம் பிரித்தல் குறித்து விளக்கம்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம், அம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் “தூய்மையே சேவை 2026” திட்டம் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி. முருகேசன் தலைமை வகித்தார். இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான குப்பைகளை முறையாகத் தரம் பிரித்து சேகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நான்கு விதமான வண்ணக் குப்பைத் தொட்டிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், குப்பைகளை முறையாகத் தரம் பிரித்து சேகரிப்பதன் அவசியம், சுற்றுச்சூழலை தூய்மையாகப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய தூய்மை நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமசந்திரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், சுகாதார ஊக்குனர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்