ஆவடியில் திரண்ட மக்கள்! கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதாக ஆவடி எம்.எல்.ஏ. ரமேஷ் குமார் உறுதி.
ஆவடி : ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 25-வது வார்டில் பொதுமக்கள் சந்திப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. S.R. உதய சரவணன் மற்றும் சர்மிளா விஜய் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பொதுமக்களை நேரில் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர், அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பல்வேறு நற்பணி மன்றங்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களின் பிரதிநிதிகள், தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர்.
குறிப்பாக, தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ. ரமேஷ் குமார், தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அவற்றை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 25-வது வார்டைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்