திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்: காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே அறிவுரை.

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் முக்கிய ஆவணங்களை முறையாகவும், ஒழுங்காகவும் பராமரிப்பது குறித்து காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கை சிறப்பாக பராமரித்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு காவல் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

நிலுவை வழக்குகளுக்கு விரைந்து நடவடிக்கை

காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.

குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காவல் பணிகளில் ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் செயல்திறனை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறப்பான காவல் சேவையை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply