ஷார்ட் பிலிம் எடுப்பதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி? நடிகை வர்ஷிணி வெங்கட் கைது

ஷார்ட் பிலிம் தயாரிப்பதாகக் கூறி இளைஞரிடம் ரூ.5 லட்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் நடிகை வர்ஷிணி வெங்கட் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் தெரிவித்த தகவலின்படி, ஷார்ட் பிலிம் தயாரிக்கப் போவதாகக் கூறியதை நம்பி சம்பந்தப்பட்ட இளைஞர் வர்ஷிணிக்கு ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.

ஆனால், அதன்பின்னர் ஷார்ட் பிலிம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வழங்கிய பணத்தை திருப்பித் தருமாறு அந்த இளைஞர் கேட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது அவரை மிரட்டி மேலும் ரூ.50,000 பணம் மற்றும் 2 செல்போன்களை பறித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மோசடி மற்றும் கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வர்ஷிணி வெங்கட் மற்றும் மேலும் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வர்ஷிணி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply