மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல்: மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக முனிரத்தினம் வாக்கு சேகரிப்பு.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வடமணிப்பாக்கம் கிராமத்தில், விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் முனிரத்தினம் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு அளித்து, விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரசாரத்தில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் முகேஷ் குமார், ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித் குமார், உதயகுமார், பிரதீபன் உள்ளிட்ட காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பிலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Leave a Reply