6 மாதங்களாக ரேஷன் வாங்காத கார்டுகள் செயலிழக்குமா? eKYC-க்கு 3 மாத காலக்கெடு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஸ்மார்ட் PDS திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்களைப் பெறாத ரேஷன் கார்டுகள் ‘Silent Ration Cards’ என கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட உள்ளதாக பொதுவிநியோகத் துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு செயலிழக்கச் செய்யப்படும் ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள அனைத்து பயனாளிகளும், கார்டை மீண்டும் செயல்படுத்துவதற்காக 3 மாதங்களுக்குள் eKYC நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும்.
eKYC செய்யாவிட்டால் கார்டு நீக்கம்
செயலிழக்கச் செய்யப்பட்ட ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து பயனாளிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் eKYC-ஐ நிறைவு செய்தால் மட்டுமே அந்த ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்படும்.
3 மாத காலக்கெடுவுக்குள் eKYC உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ரேஷன் கார்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு இருந்தால்?
ஒரே பயனாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அந்த நபர் 3 மாதங்களுக்குள் eKYC-ஐ நிறைவு செய்து, தக்கவைத்துக்கொள்ள வேண்டிய ஒரு ரேஷன் கார்டைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின்னர், மற்ற ரேஷன் கார்டுகளில் இருந்து தங்களது பெயரை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் eKYC உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை நிறைவு செய்யாத கார்டுகள் மற்றும் பயனாளர்களின் தகவல்கள் தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்படும் என பொதுவிநியோகத்துறை எச்சரித்துள்ளது.
ரேஷன் பயனாளிகளுக்கு அறிவுறுத்தல்
ரேஷன் சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய, பயனாளிகள் தங்களது ரேஷன் கார்டு தொடர்பான eKYC உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் ஸ்மார்ட் PDS திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், இதுதொடர்பான மேலும் விரிவான தகவல்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என்று பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் விவகார ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்