தங்கத் தகடு விற்பனை பெயரில் ரூ.48 லட்சம் மோசடி: 2 காவலர்கள் உட்பட 8 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சரகத்தில், தங்கத் தகடு விற்பனை செய்வதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், 2 காவலர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில், சங்கரமூர்த்தி, நாகராஜ், கருப்பையா, சுரேஷ், முத்துப்பாண்டி, குப்புசாமி ஆகிய 6 பேரும், தேனி மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வந்த காவலர்கள் தங்கராஜ் மற்றும் கதிரேசன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றச்செயலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களிடமிருந்து ரூ.6 லட்சம் ரொக்கப் பணம், ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றச்செயலில் தொடர்புடையவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் பாராட்டினார்.
வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்