சாராங்கல் கிராமத்திற்கு புதிய பேருந்து சேவை: எம்.எல்.ஏ. க. சிந்து தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா சாராங்கல் கிராம மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, பேரணாம்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து சாராங்கல் கிராமத்திற்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் 24.09.2026 அன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி க. சிந்து கொடியசைத்து புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு ஒன்றியக் கழக செயலாளர்கள் A. சத்தியகுமார் மற்றும் M. ஹரிஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் நகரக் கழக செயலாளர் D. இளங்கோ, பேரணாம்பட்டு நகரக் கழக செயலாளர் B. வினோத் பாபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோஜ் குமார், வடக்கு நகர செயலாளர் நசிர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அணி நிர்வாகிகள், நகர மற்றும் ஒன்றியக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் திரளாக பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி
புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் சாராங்கல் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பேரணாம்பட்டு பகுதிக்கு பேருந்து மூலம் செல்லும் வசதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
புதிய பேருந்து சேவை மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர், பொதுமக்கள் உள்ளிட்டோரின் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.
தமிழக வெற்றிக்குரல்