ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையரில் வெண்கலம்! – முதலமைச்சர் வாழ்த்து!
ஜோஷ்னா சின்னப்பா – வேலவன் செந்தில்குமாருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை – செப்டம்பர் 26: ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் (Mixed Doubles) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், பதக்கம் வென்ற வீரர்களின் சாதனையை பாராட்டியதுடன், அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் (Squash) விளையாட்டின் கலப்பு இரட்டையர் (Mixed Doubles) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார்… pic.twitter.com/uesXFRCbUX
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 26, 2026
மேலும், வீரர்களின் மகத்தான சாதனையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதுணையாக நிற்கும் என்றும், அவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்