ஆசிய விளையாட்டுப் போட்டியில் அபய் சிங்கிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாதனை – ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்
சென்னை – செப்டம்பர் 28: ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு முதலமைச்சர் தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
அபய் சிங்கின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அபய் சிங்கின் இந்த வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அபய் சிங் எதிர்காலத்திலும் பல்வேறு வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்