கிருஷ்ணகிரி நகரில் வழிப்பாதையில் குப்பைகள் அகற்றம்: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகரத்திற்குட்பட்ட வார்டு பகுதியில் வழிப்பாதையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், அதனைத் தொடர்ந்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வழிப்பாதையில் தனிநபர்கள் தினமும் குப்பைகளை கொட்டிச் செல்வதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாகச் செல்வதில் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் P. முகுந்தன் அவர்களின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகர கழக செயலாளர் M. சசிகுமார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, பொதுமக்கள் தெரிவித்த பிரச்சினை குறித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் எடுத்துரைக்கப்பட்டு, குப்பைகளை அகற்றும் பணியை உடனடியாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழிப்பாதையில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, அப்பகுதி சீரமைக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக சிரமமின்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் குப்பைகளை பொது இடங்களிலும், வழிப்பாதைகளிலும் கொட்டாமல் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் குப்பை சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்