கிருஷ்ணகிரியில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவ சக்திவேலின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சிவ சக்திவேல் அவரிடம் வாழ்த்து மற்றும் ஆசிபெற்றார்.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் பிரசித்தி பெற்ற குகை காளியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. சிவ சக்திவேல் கோவிலில் வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், குகை காளியம்மன் திருக்கோவில் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ முருகன் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பாக்யா, ராம்குகைகாளி, செல்வராணி, சனவுல்லா, மணிகண்டன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்றவர்கள் சிவ சக்திவேலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்