ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜ்: ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

வித்யா ராம்ராஜின் மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வித்யா ராம்ராஜ் பெறும் மூன்றாவது பதக்கம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வித்யா ராம்ராஜின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் வித்யா ராம்ராஜ் பல்வேறு வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply