பாலக்கோட்டில் ஒன்றிய அளவிலான பயிற்சி பட்டறை: கிராம சபை கூட்ட ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களுக்கான மதிப்பீடுகளை ஆன்லைனில் தயாரித்தல், மின்னணு அளவீட்டுப் புத்தகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பான ஒன்றிய அளவிலான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இந்த பயிற்சி பட்டறைக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் தலைமை வகித்தார். இதில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிராம சபைக் கூட்டத்திற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், கூட்டம் தொடர்பாக பயிற்சி வழங்குதல், பங்கேற்பாளர்களின் வருகைப் பதிவேட்டை முறையாக பராமரித்தல் உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், கிராம சபைக் கூட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாகப் பதிவு செய்து பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
அரசுத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை உரிய முறையில் தேர்வு செய்தல், அனுமதிக்கப்பட்ட பணிகள் குறித்த ஆவணங்களைப் பராமரித்தல் மற்றும் பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும் பணிகளை முறையாக ஆவணப்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான மதிப்பீடுகளை இணையவழியில் தயாரித்தல், மின்னணு அளவீட்டுப் புத்தகத்தை முறையாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
கிராம சபைக் கூட்டம் தொடர்பான பணிகள் மற்றும் ஆவணங்களை அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக மேற்கொள்வதற்கான நடைமுறைகள் குறித்தும் பயிற்சி பட்டறையில் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பயிற்சி பட்டறையில் உதவி பொறியாளர் துரைசாமி, மேற்பார்வையாளர் ராஜசேகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணிமேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் கிராமசபை பற்றாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்