சிறந்த மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு: திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசுகள்.

திருப்பத்தூர், அக். 3:

திருப்பத்தூர் நகரில் திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறந்த மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நாட்டறம்பள்ளி வட்டம், பச்சூர் மற்றும் கொத்தூர் அரசு பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விழாவில் பாராட்டப்பட்டனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட அரசு வழக்கறிஞர் M. மனோகரன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மாணவர்களின் கல்வி சாதனையைப் பாராட்டி, அவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் VIT கல்வி நிறுவன துணைத் தலைவர் G.V. செல்வம், மூத்த வழக்கறிஞர் S.S. மணியன், அறக்கட்டளை தலைவர் ஏலகிரி V. செல்வம், செயலாளர் S. ரவிக்குமார், ஆடிட்டர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி சாதனைகளை அங்கீகரித்து பரிசுகள் வழங்கிய இந்த நிகழ்வு, மாணவர்களுக்கு மேலும் கல்வியில் சிறந்து விளங்க ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.

Leave a Reply