புரட்டாசி 3-வது சனிக்கிழமை: சித்திரப்பட்டி ஸ்ரீ பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சித்திரப்பட்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவிலில், புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிறப்பு வழிபாட்டில் ஊர் கவுண்டர் முனிரத்தினம், மந்திரி கவுண்டர் சங்கர், ஆசிரியர் தெய்வம் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், பெரியோர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பக்தியுடன் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம்
வழிபாட்டைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றுச் சென்றனர்.
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
தமிழக வெற்றிக்குரல்