மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை: ‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் திருமணம் நடைபெறும் தகுதியான மணப்பெண்களுக்கு 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் வகையில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட செயல்பாட்டிற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான மணப்பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் தங்க நாணயமும் பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளது. ‘அண்ணன் சீர்’ திட்டத்துக்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பட்ஜெட் அறிவிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணமாகும் மணப்பெண்களுக்கு அண்ணன் சீர்! தமிழகத்தில் திருமணம் நடைபெறும் மணப்பெண்களுக்கு, அரசின் சார்பில் “அண்ணன் சீர்” என்ற அன்பான திட்டத்தின் கீழ் 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்குவதற்கான நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணம். அந்தத் தருணத்தில், ஒரு அண்ணனாக அரசே உடனிருந்து மணப்பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மகளிரின் நலனையும், குடும்பங்களின் திருமணச் செலவுச் சுமையையும் கருத்தில் கொண்டு “அண்ணன் சீர்” திட்டத்தை செயல்படுத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் நலன் காக்கும் அரசின் மக்கள் நலப் பயணத்தில், “அண்ணன் சீர்” திட்டமும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும். மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu திரு. விஜய் அவர்களின் தலைமையில் மகளிர் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம்! #CMVijay #CMJosephVijay #tngovt #அண்ணன்சீர் #AnnanSeer #MinisterJagadeeswari #WomenWelfare #TamilNaduGovernment
— Jagadeshwari (@jagadeshwarioff) October 5, 2026
இணையதளம் மூலம் விண்ணப்பம்
இத்திட்டத்தின் பயனாளிகளிடம் இருந்து இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. இதற்காக சிறப்பு இணையதளப் பக்கத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திட்டத்துக்கான இணையதளம் விரைவில் தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் முழுமையான தகுதி நிபந்தனைகள், தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் மற்றும் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணச் செலவுச் சுமையை குறைக்கும் நோக்கம்
திருமணம் என்பது பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வாக இருப்பதால், அந்தச் சூழலில் அரசே ஒரு அண்ணனாக இருந்து மணப்பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கும் வகையில் ‘அண்ணன் சீர்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
தங்கம் மற்றும் பட்டுப்புடவை உள்ளிட்ட திருமணச் செலவுகளால் குடும்பங்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 கிராம் தங்க நாணயம்
திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள தங்க நாணயம் 8 கிராம் எடையிலும் 22 காரட் தரத்திலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளது.
திருமண உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள ‘அண்ணன் சீர்’, 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டில் ரூ.812 கோடி ஒதுக்கீட்டுடன் இடம்பெற்றுள்ளது.
திட்டத்துக்கான இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பயனாளிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் வெளியான பின்னர் திட்டத்தின் செயல்பாடு குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.
தமிழக வெற்றிக்குரல்