கிருஷ்ணகிரியில் சிறப்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா – மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தலைமையில் நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தலைமை வகித்தார்.

கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பி. முகுந்தன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான நல உதவிகள் மற்றும் வாழ்த்துகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகர கழக செயலாளர் எம். சசிகுமார் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

தாய்மார்களின் நலன், ஊட்டச்சத்து மற்றும் கர்ப்ப கால பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு சமூக ஆதரவை வழங்கும் நோக்கிலும் இதுபோன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply