பாலக்கோட்டில் பாஜக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் – கட்சி பணிகள் குறித்து ஆலோசனை.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பாஜக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் திருவேங்கடம், மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட தலைவர் சுரேஷ், மத்திய நலத்திட்டப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே. சிவா, மாநில இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாலக்கோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்சிப் பணிகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்சி நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
கட்சி அமைப்பை வலுப்படுத்த ஆலோசனை
மேலும், கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்துவது, நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது மற்றும் பொதுமக்களிடம் மத்திய அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நகர அமைப்பாளர் பெரியசாமி, முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிஷ்ணன், நகர செயலாளர் நந்தகிரி, முரளி, நகர பொருளாளர் முனியப்பன், கிளை தலைவர் அழகு பெருமாள், நிர்வாகிகள் வெங்கடேஷ், பச்சியப்பன், சின்னசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்