3 நாட்களாக மாயமான தம்பதி, 3 வயது குழந்தை! திருவனந்தபுரத்தில் பரபரப்பு – விசாரணையில் புதிய தகவல்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டாக்கடை அருகே வீரணகாவு பகுதியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது மூன்று வயது மகளும் கடந்த மூன்று நாட்களாகக் காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சங்கர், அவரது மனைவி ஆதிரா மற்றும் மூன்று வயது மகள் த்வனி சங்கர் ஆகியோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் தெரிவித்த காவல்துறையினர், அந்தக் குடும்பத்திற்குப் பொருளாதாரச் சுமைகள் இருந்ததாகக் கூறியுள்ளனர். இருப்பினும், குடும்பத்தினர் காணாமல் போனதற்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இதையடுத்து, காட்டாக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கண்டறிவதற்கான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

காணாமல் போன தம்பதியரும் குழந்தையும் எங்குள்ளனர், அவர்கள் காணாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply