3 நாட்களாக மாயமான குடும்பம் பத்திரமாக மீட்பு? எர்ணாகுளத்தில் இருப்பது உறுதி – தாயைத் தொடர்புகொண்ட இளம்பெண்!

கேரள மாநிலம், காட்டாக்கடையில் கடந்த மூன்று நாட்களாகக் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் எர்ணாகுளத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காட்டாக்கடை அருகே வீரணகாவு பகுதியைச் சேர்ந்த சங்கர், அவரது மனைவி ஆதிரா மற்றும் மகள் த்வனி சங்கர் ஆகிய மூவரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போயினர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, காட்டாக்கடை காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, மூவரையும் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், காணாமல் போன இளம்பெண் தனது தாயைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் குடும்பத்தினர் எர்ணாகுளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

மூவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் காணாமல் போனதற்கான காரணம் குறித்து கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.

Leave a Reply