தியாகி இமானுவேல் சேகரனாருக்கு முதல்வர் விஜய் வீர வணக்கம்!“சமத்துவமும், சகோதரத்துவமும் தழைத்தோங்க உறுதியேற்போம்” – சமூக வலைதளத்தில் பதிவு
சென்னை – அக்டோபர் 9: தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவருக்கு வீர வணக்கம் செலுத்தி, அவரது சமூகநீதிப் பணிகளைப் போற்றிப் புகழாரம் சூட்டியுள்ளார்.
சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வீர வணக்கங்களைச் செலுத்துவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமத்துவம் மற்றும் சுயமரியாதைக்காகக் குரல் கொடுத்ததோடு, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகளுக்காகவும் இமானுவேல் சேகரனார் போராடியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவரது தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தியாகி இமானுவேல் சேகரனார் காட்டிய வழியில் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கி, சமத்துவமும் சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்