மதுராந்தகம், தாராபுரம் வெற்றி எதிரொலி! தேன்கனிக்கோட்டையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய தவெகவினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் தேன்கனிக்கோட்டை பேரூர் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் வேந்தைகரசன் என்ற வடிவேல் அவர்களின் உத்தரவின்படி, தேன்கனிக்கோட்டை பேரூர்க் கழகச் செயலாளர் சந்தோஷ், இணைச் செயலாளர் மாதேஷ், பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒன்றிணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தேன்கனிக்கோட்டை பேரூர் செயற்குழு உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்