புரட்டாசி 4-வது சனிக்கிழமை வழிபாடு! சித்திரப்பட்டி பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சித்திரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெருமாள் திருக்கோவிலில், புரட்டாசி மாதத்தின் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளைத் தரிசனம் செய்தனர்.

அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுவதால், பக்தர்கள் விரதம் இருந்து கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில், சித்திரப்பட்டி ஸ்ரீ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்ரீ பெருமாள் சுவாமிக்குப் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு லட்டு பிரசாதம், அன்னதானம்

வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்கவுண்டர் முனிரத்தினம், மந்திரிகவுண்டர் சங்கர், ஆசிரியர் தெய்வம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னின்று செய்திருந்தனர்.

புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டையொட்டி, சித்திரப்பட்டி கிராமத்தில் ஆன்மிகச் சூழல் நிலவியது.


இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.

Leave a Reply