மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் மரகதம் குமரவேல், சத்தியபாமா உறுதிமொழி ஏற்பு – அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை – அக்டோபர் 12: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மரகதம் குமரவேல், பொ. சத்தியபாமா ஆகியோர் இன்று (அக்டோபர் 12) சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் பொ. சத்தியபாமாவும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர். இதற்கு முன்பு அதிமுக சார்பில் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த இருவரும், பின்னர் தவெகவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தப் பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர் நா. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, டாக்டர் கோ. அருண்ராஜ், கே. செங்கோட்டையன், ப. வெங்கட்ரமணன், சி.ஜி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன், நெ. மரிய வில்சன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்றப் பேரவைச் செயலாளர் இரா. சாந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.
இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்