பட்டா வழங்கக் கோரி செப்டம்பர் 8-ல் சாகும் வரை உண்ணாவிரதம்

பழனி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி சாகுபடி நிலங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி ‘சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்’ நடத்தப்போவதாக விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
​

​திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், பெரியம்மாபட்டி, இரவிமங்கலம் மற்றும் ஆனைப்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் உழவு செய்து வருகின்றனர்.


​இந்நிலையில், தங்களுக்குப் பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி பழனி RDO அலுவலகம் முன்பாக சாகும்காலம் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ​கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பி-நோட்டீஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விசாரணைப் பணிகள் நிறைவுற்ற அரசு உபரி நிலங்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) உடனடியாக ஒப்புதல் வழங்கி பட்டா வழங்க வேண்டும்.


​பெரியம்மாபட்டி கிராமம் புல எண் 330 கோப்புகள் பட்டா வழங்கும் நிலையை அடைந்தும், கடந்த 3 ஆண்டுகளாகக் கால தாமதம் செய்து வரும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


​நில அளவை மற்றும் உட்பிரிவுப் பணிகள் முடிவடைந்த நிலுவைக் கோப்புகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாகப் பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்.
​நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் பட்டா பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணாவிட்டால், திட்டமிட்டபடி செப்டம்பர் 8 அன்று போராட்டம் தீவிரமடையும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.பழனி: பழனி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள் தெரிவித்தனர்.


திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பெரியம்மாபட்டி, இரவிமங்கலம் மற்றும் ஆனைப்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் சாகுபடி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தாங்கள் நீண்ட காலமாக சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி பழனி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பி-நோட்டீஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விசாரணைப் பணிகள் நிறைவடைந்த அரசு உபரி நிலங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உடனடியாக ஒப்புதல் வழங்கி பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
பெரியம்மாபட்டி கிராமம் புல எண் 330 தொடர்பான கோப்புகள் பட்டா வழங்கும் நிலையை அடைந்தும், கடந்த 3 ஆண்டுகளாக காலதாமதம் செய்து வரும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
அதேபோல், நில அளவை மற்றும் உட்பிரிவு பணிகள் நிறைவடைந்த நிலையில் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக நிலவி வரும் பட்டா பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால், திட்டமிட்டபடி செப்டம்பர் 8-ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply