காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

காரிமங்கலம்: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, நுகர்வோர் மன்றம் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம், உணவுப் பொருட்களில் நடைபெறும் கலப்படங்கள், தரமான உணவுப் பொருட்களைத் தேர்வு செய்வது மற்றும் உணவுப் பொருட்களை வாங்கும்போது நுகர்வோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் பாலக்கோடு உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் திருப்பதி கலந்து கொண்டு, உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் முனைவர் ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுப் பொருட்களைத் தேர்வு செய்வதில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply