கோவை விமான நிலையத்தில் ரசிகர் மன்ற நிர்வாகியை அழைத்துப் பேசிய முதல்வர் விஜய்!
கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெளியே நின்று கையசைத்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை, தமிழக முதலமைச்சர் விஜய் அழைத்துப் பேசினார். மேட்டுப்பாளையம் விஜய் ரசிகர் மன்ற நகரச் செயலாளர் ரங்கராஜனை அழைத்துப் பேசிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசியது குறித்து ரங்கராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கட்சியில் தற்போது உள்ள நிர்வாகிகள் தன்னைப் போன்ற மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டுவதாக முதலமைச்சரிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் ரங்கராஜன் தனது பேட்டியில் தெரிவித்தார்.
30 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில்!
கடந்த 30 ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தில் இருப்பதால், தன்னை முதலமைச்சர் எளிதில் அடையாளம் கண்டுகொண்டு அழைத்துப் பேசியதாகவும் ரங்கராஜன் கூறினார்.
கோவை விமான நிலையத்திற்கு வெளியே ரசிகர் மன்ற நிர்வாகியை முதலமைச்சர் அழைத்துப் பேசியதும், கட்சியில் மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாக முன்வைக்கப்பட்ட புகார் குறித்த அவரது கருத்துகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
தமிழக வெற்றிக்குரல்