டி. சிந்தலைச்சேரியில் ‘நம்ம விஜய் நம்ம எம்எல்ஏ நலங்காக்கும் மருத்துவத் திட்டம்’ தொடக்கம்!

தேனி: தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உத்தமபாளையம் கிழக்கு ஒன்றியம், டி. சிந்தலைச்சேரியில் ‘நம்ம விஜய் நம்ம எம்எல்ஏ நலங்காக்கும் மருத்துவத் திட்டம்’ தொடங்கப்பட்டது.

இந்த மருத்துவ முகாமை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.

பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை, மருந்துகள்!

முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டன. மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படக்கூடிய நோயாளிகளுக்கு அதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

திரளாகப் பங்கேற்ற பொதுமக்கள்

டி. சிந்தலைச்சேரியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்த முகாம், அப்பகுதி மக்களுக்கு மருத்துவ சேவைகளை எளிதில் பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது.

Leave a Reply