ஆவடி மாநகராட்சிக்கு வந்தன ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள்!
ஆவடி: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் தேங்கும் பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் வகையில், ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஆவடி மாநகராட்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
மழைநீரை அகற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பல்வேறு ஊராட்சிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஆவடி மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தேவையான பகுதிகளுக்கு அனுப்பத் திட்டம்!
பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த டிராக்டர்கள், ஆவடி மாநகராட்சிப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழையின்போது தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு மழைநீரை வெளியேற்றுவதற்காக இந்த டிராக்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு!
ஆவடி மாநகராட்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ள டிராக்டர்களை மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகராட்சி ஆணையர் அம்பிகா ஜெயின் ஐஏஎஸ், துணை மேயர் சூரியகுமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்