மத்தூரில் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைப்பது குறித்து மின்வாரியம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
மத்தூர், அக். 16: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மத்தூர் போச்சம்பள்ளி மின்வாரியம் சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அரசு மானியம், வங்கிக் கடன் பெறுவது குறித்து விளக்கம்!
மத்தூர் போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்தூர் மற்றும் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வீடுகளில் சோலார் பேனல்களை எவ்வாறு அமைப்பது, அவற்றைப் பயன்படுத்தும் முறை, அரசு மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் வங்கிக் கடன் பெறுவது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
சோலார் மின்சாரத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு!
மேலும், வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதால் கிடைக்கும் பயன்கள் மற்றும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, சோலார் பேனல் அமைப்பது தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்