ஆவடி எம்.எல்.ஏ. ஆர். ரமேஷ்குமார் பிறந்தநாள்: ஏழை, எளிய சிறு வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி 100 நாட்களைக் கடந்து வரும் நிலையில், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ஆர். ரமேஷ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, ஆவடி பகுதியில் உள்ள ஏழை, எளிய சிறு வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை கட்சி உறுப்பினர் காந்திநகர் சரவணன் ஏற்பாடு செய்திருந்தார். கட்சி உறுப்பினர் பி.டி.எம்.எஸ். பென்னி வழங்கிய உதவிப் பொருட்களை, ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ஆர். ரமேஷ்குமார் தனது கைகளால் பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வில்லியம், மனோகரன், சைமன், வயலட் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஆர். ரமேஷ்குமார், ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதில் கட்சி உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் ஆர்வம் காட்டினால், மக்களின் வாழ்க்கை மேம்படுவதுடன் நாடும் சிறப்பான வளர்ச்சியை அடையும் எனத் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக்குரல்