பாலக்கோடு அருகே ஹவுசிங் போர்டு பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா!

தருமபுரி: டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கரகதஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

சமூக சேவகர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்ட வட்டாட்சியர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு விழாவைச் சிறப்பித்தனர்.

மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரித்து வளர்ப்பது பூமிக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் நாம் செய்யும் முக்கியமான பங்களிப்பாகும். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும், சுற்றுப்புற வெப்பநிலையைக் குறைக்கவும் மரங்கள் உதவுகின்றன. மேலும், மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் உயிர்வாழத் தேவையான தூய்மையான காற்றை வழங்குவதிலும் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்நிகழ்ச்சியில் அம்மாசியம்மாள், முனியப்பன், சாந்தா, மாதன், சிவசங்கர், கௌதம், ஆறுமுகம், ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சித் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply