திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே ஆய்வு!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே, திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள அறிவுரை
பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் குறைகளை உரிய முறையில் அணுகி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
பொதுமக்களின் குறைகளைக் கவனமாகக் கேட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் காவல்துறையின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக்குரல்