பாலக்கோடு அதிமுக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா! முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் இனிப்புகள் வழங்கி வாழ்த்து.

பாலக்கோடு, தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் அலுவலகத்தில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டார். தொடர்ந்து, அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொரி, இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு நகரச் செயலாளர் ராஜா, ஒன்றியச் செயலாளர்கள் வழக்கறிஞர் செந்தில், கோபால், ஒன்றியத் துணைச் செயலாளர் அண்ணாமலை, முன்னாள் நகரச் செயலாளர் சங்கர், முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் புதூர் சுப்பிரமணி, வீரமணி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்கத் துணைத் தலைவர் கோவிந்தசாமி, அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் ராஜா, கவுன்சிலர்கள் விமலன், குருமணி, கிளைச் செயலாளர்கள் கண்ணையன், சிவராஜ், சரவணன், சலீம், முனிராஜ், அக்ரோ சாம்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அம்மா பேரவை நிர்வாகி சண்முகம், பேளாரஅள்ளி கார்த்திக், சிவலிங்கம், ஆறுமுகம், காமராஜ், நாகப்பன், மெடிக்கல் செந்தில் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ராஜா, அசோக், அருள், கௌதம், முரளி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனிடம் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டனர்.

Leave a Reply