திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்!

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் அனில் வாகரே தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பாக மொத்தம் 41 மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் அனில் வாகரே தெரிவித்தார்.

Leave a Reply