டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!

9 பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றம் – சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் வெளியீடு

சென்னை, அக்டோபர் 22:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் (பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை) கீழ் அறிவிக்கப்பட்ட 9 பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், தேர்வர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த 2026 ஜூலை 7ஆம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகள்

மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடவடிக்கைகள் 2026 செப்டம்பர் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்றன.

இந்த நிலையில், நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத காலிப்பணியிடங்களுக்கான கூடுதல் கணினி வழித் திரையில் சான்றிதழ் சரிபார்ப்பு (Onscreen Certificate Verification) நடைபெற்றது. இதில் தேர்வர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதிகள், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை எங்கே பார்க்கலாம்?

தேர்வர்கள் தங்களது முடிவுகள் மற்றும் தொடர்புடைய விவரங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம்.

தேர்வர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து, தங்களது தேர்வு நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply